நாட்டிற்காக அர்ப்பணிப்புடன் செயலாற்ற முன்வரவேண்டும்: பிள்ளையான்
நாட்டிற்காக நாங்கள் அர்ப்பணித்து செயலாற்ற முன்வரவில்லை என்றால் கடையடைப்பும் போராட்டங்களும் எதிர்கால குழந்தைகளையே பாதிக்கும்
என இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (Pillayan) தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு (Batticaloa) கோட்டைமுனை கனிஸ்ட வித்தியாலயத்தில் நேற்று (15.07.2024) இடம்பெற்ற புதிய நுழைவாயில் திறப்பு விழாவில் கலந்துகொண்டு கருத்துரைக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், "நாங்கள் அனைவரும் திட்டமிட்டு சரியாக செயலாற்றினால் அடுத்த மூன்று அல்லது ஐந்து வருடங்களில் அனைவருக்கும் உயர்ச்சிளையும் சம்பள அதிகரிப்புகளையும் முக்கியமாக இளைஞர் யுவதிகளுக்கான வேலைவாய்ப்புகளையும் உருவாக்கி கொள்ளமுடியும்.
அரசாங்கத்தின் கொள்கை
அனுபவம் இல்லாதவர்களின் கதைகளை கேட்டு அரசாங்கத்தின் கொள்கையினை சரியாக மதித்து நடக்க தவறினால் நாடு மீண்டும் அமிழ்ந்துவிடும்.
அறிவுபூர்வமான வகையில் ஆசிரிய சங்கம் உட்பட தொழிற்சங்கங்கள் தீர்மானங்களை எடுத்து அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பினை வழங்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.
சிவநேசதுரை சந்திரகாந்தனின், 2024ஆம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ், மட்டக்களப்பு கோட்டைமுனை கனிஸ்ட வித்தியாலயத்தில் அமைக்கப்பட்ட புதிய நுழைவாயில் திறப்பு விழா மற்றும் பெயர்ப் பலகை திரைநீக்கம் செய்யும் நிகழ்வு ஆகியன நேற்று (15) மாலை நடைபெற்றன.
விசேட திட்டம்
இதன்போது, குறித்த பாடசாலையின் இடப்பற்றாக்குறை தொடர்பில், சிவநேசதுரை சந்திகாந்தனின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்ட நிலையில், உயர்கல்வி அமைச்சுக்கு சொந்தமான காணி பாடசாலைக்கு வழங்கப்பட்டு புனரமைப்பு செய்யப்பட்டுள்ளன.
மேலும், பாடசாலை ஆரம்பிக்கப்பட்டு 79 வருடங்களுக்குப் பின்னர், பாடசாலையின் இடப்பற்றாக்குறை பூர்த்தி செய்யப்பட்ட நிலையில், விஸ்தரிக்கப்பட்ட பாடசாலை வளாகத்தில் பிரதான நிகழ்வு நடைபெற்றுள்ளது.
இந்நிகழ்வில், மதத் தலைவர்கள், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர், கல்வியியலாளர்கள், பெற்றோர்கள் மற்றும் பழைய மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |














உலகில் பரவும் மர்ம வியாதி... தொற்றுநோய் அச்சுறுத்தலை அறிவித்த நாடு: அதிகரிக்கும் எண்ணிக்கை News Lankasri

ஜீ தமிழின் நினைத்தாலே இனிக்கும் சீரியலின் கடைசிநாள் படப்பிடிப்பு முடிந்தது... புகைப்படங்கள் இதோ Cineulagam

நடந்துசெல்லும் போது திடீரென மயங்கி விழுந்த பிக் பாஸ் போட்டியாளர்.. வீட்டில் எல்லோரும் அதிர்ச்சி Cineulagam

உலக சாதனை செய்துள்ள சூப்பர் சிங்கர் புகழ் சரண் ராஜா... இன்ப அதிர்ச்சியில் அரங்கம், வீடியோ இதோ Cineulagam

ஐப்பசி மாதத்தில் அதிர்ஷ்ட காணும் 6 ராசியினர்- உங்க ராசியும் இருக்கா பாருங்க- இன்றைய ராசிப்பலன் Manithan

தங்கம், வெள்ளி நகைகளை ஏன் பிங்க் நிற பேப்பரில் சுற்றி தருகிறார்கள்? பலருக்கும் தெரியாத ரகசியம்! Manithan
