நீண்ட நாட்களுக்குப் பின் மீண்டும் கைவிலங்குடன் பிள்ளையான்! நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
புதிய இணைப்பு
கடந்த 2006ஆம் ஆண்டு கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சி. ரவீந்திரநாத் கொழும்பில் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் என்ற சிவநேசத்துரை சந்திரகாந்தனை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது
கல்கிசை நீதவான் நீதிமன்றத்தில் இன்று (02) முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்போது பேராசிரியர் ரவீந்திரநாத் கடத்தல் மற்றும் ஏனைய குற்றச்சாட்டுகள் தொடர்பில் சட்ட மா அதிபரின் ஆலோசனை கிடைக்கும் வரை பிள்ளையானை விளக்கமறியலில் வைக்குமாறு கல்கிசை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 2025 ஏப்ரல் 8ஆம் திகதி குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தால் (CID) கைது செய்யப்பட்ட அவர், சுமார் 359 நாட்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு தொடர்ச்சியாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் இன்றையதினம்(02.04.2026) மருத்துவ பரிசோதனைகளுக்காக சட்டவைத்திய அதிகாரியிடம் அழைத்து வரப்பட்டுள்ளார்.
கடந்த ஏப்ரல் 08ஆம் திகதி மட்டக்களப்பில் குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைதுசெய்யப்பட்ட பின்னர், ஏப்ரல் 12, 2025 அன்று பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் 90 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்
இந்நிலையில், கிழக்கு மாகாணத்தில் 2006ஆம் ஆண்டு பல்கலைக்கழக துணைவேந்தர் கடத்தப்பட்டு காணாமல்போனமை தொடர்பாக அவர் கைதானதாக தெரிவிக்கப்பட்டது.
ஆட்கடத்தல் குற்றச்சாட்டுக்கு அப்பால் உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலுக்கும் பிள்ளையானுக்கும் தொடர்பிருக்கிறதா என்பது தொடர்பில் தீவிர விசாரணைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
உடம்பு முடியாமல் இருப்பவரை பார்த்து கிண்டல் செய்த பாண்டியன், கோபத்தில் கோமதி... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
சந்தோஷ செய்தி சொன்ன மீனா, ஆத்திரத்தில் விஜயா செய்த மோசமான காரியம்... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
எல்லோரும் அஜர், சேரன் மட்டும் வரவில்லை, பல்லவன் செய்த காரியம், கடைசியில்... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
குணசேகரன் அடுத்த திட்டம், மதிவதனியை பார்க்க வந்த ராணா... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam