டிரம்பின் அடுத்தடுத்த நடவடிக்கை: எங்களுக்கு வேறு வழியில்லை - கோபமடைந்துள்ள ஈரானின் அதிரடி அறிவிப்பு
இது ஈரானிய மக்கள் மீது திணிக்கப்பட்ட ஒரு அநியாயப் போர், கடுமையாகப் பதிலடி கொடுப்பதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை என ஈரானின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அறிவித்துள்ளார்.
ஈரான் இரண்டு முதல் மூன்று வாரங்களுக்குள் ஒரு ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொள்ள வேண்டும் அல்லது அதன் அனைத்து மின் உற்பத்தி நிலையங்கள் மீதும் தாக்குதல்களை எதிர்கொள்ள நேரிடும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரித்திருந்தார்.
டிரம்பின் உரைக்கு பதிலளிக்கும் விதமாக அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், போர், பேச்சுவார்த்தைகள், போர் நிறுத்தம், பின்னர் இதே முறையை மீண்டும் மீண்டும் பின்பற்றும் இந்தத் தீய சுழற்சியை நாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம் மேலும், நடந்து கொண்டிருக்கும் இந்த மோதல் ஈரானுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த பிராந்தியத்திற்கும் மற்றும் அதற்கு அப்பாலும் பேரழிவை ஏற்படுத்தக்கூடியது.

ஈரான் தொடர்ந்து திருப்பித் தாக்கும்
அமெரிக்க - இஸ்ரேலிய தாக்குதல்கள் தொடரும் வரை ஈரான் தொடர்ந்து திருப்பித் தாக்கும். தெஹ்ரான் தனது வளைகுடா அண்டை நாடுகளை எதிரிகளாகக் கருதவில்லை. அவர்கள் அனைவருடனும் எங்கள் நல்லுறவைத் தொடர நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என்று பலமுறை கூறியுள்ளோம்.
பிரச்சினை என்னவென்றால், அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானுக்கு எதிரான தங்கள் இராணுவ ஆக்கிரமிப்பைச் செயல்படுத்த அவர்களின் பிரதேசங்களைச் சுரண்டுகின்றன. இது ஈரானிய மக்கள் மீது திணிக்கப்பட்ட ஒரு அநியாயப் போர். கடுமையாகப் பதிலடி கொடுப்பதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.