பிள்ளையானின் அடிப்படை உரிமை மீறல் மனு.. நீதிமன்றத்தின் தீர்மானம்
முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன், தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனுவை விசாரிக்க உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
நீதிமன்றின் இந்த தீர்மானம் இன்று (24.07.2025) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பிள்ளையான், தான் கைது செய்யப்பட்டமை சட்டவிரோதமானது என்றும் அவருக்கு வழங்கப்பட்டுள்ள தடுப்புக்காவலை எதிர்த்தும் அடிப்படை உரிமைகள் மனு தாக்கல் செய்திருந்தார்.
தடுப்புக்காவல்
குறித்த மனுவில் அரசியலமைப்பின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்ட பல அடிப்படை உரிமைகள் மீறப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
இதில் பிரிவு 12(1) (சட்டத்தின் முன் சமத்துவம்), 12(2) (அரசியல் கருத்தை அடிப்படையாகக் கொண்ட பாகுபாடு), 13(1) (காரணமின்றி கைது), மற்றும் 13(2) (சட்ட நடைமுறைக்கு வெளியே கைது) ஆகியவை அடங்கும்.
மனுதாரரான பிள்ளையான் சார்பாக ஜனாதிபதி சட்டத்தரணி மனோகர டி சில்வா மற்றும் சட்டத்தரணி உதய கம்மன்பில ஆகியோர் முன்னிலையானார்கள். மனுவைத் தொடர நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதுடன், மேலும் அது குறித்த விசாரணைக்கான திகதியையும் நிர்ணயிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
You may like this.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





படப்பிடிப்பில் கொண்டாட்டத்தில் இறங்கிய கார்த்திகை தீபம் சீரியல் பிரபலங்கள்... என்ன ஸ்பெஷல், போட்டோஸ் இதோ Cineulagam

பெண்கள் பிளான் எல்லாம் சுக்குநூறாக போகிறது, தர்ஷனை காப்பாற்றுவது எப்படி.. எதிர்நீச்சல் பரபரப்பு புரொமோ Cineulagam
