பிரித்தானிய ஊடகம் வெளியிட்ட காணொளி தொடர்பில் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ள பிள்ளையான்
உயிர்த்த ஞாயிறுத் தாக்குல்கள் தொடர்பாக, 'செனல் 4' ஒளிபரப்பிய ஆவணப்படத்தின் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணைக்காக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் நாளைய தினம் (12) குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார்.
பிரித்தானிய (UK) தொலைக்காட்சியான செனல் 4 உயிர்த்த ஞாயிறுத் தாக்குல்கள் தொடர்பாக ஒளிபரப்பிய ஆவணப்படத்தின் குற்றச்சாட்டுகள் தொடர்பில் வாக்குமூலம் பதிவு செய்வதற்காகவே அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ, இன்று (11) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இந்த விடயம் குறித்து தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்
இதன்போது, பிள்ளையானின் பேச்சாளரான, அஸாத் மௌலானாவின் தகவல்கள் தொடர்பில், பொது பாதுகாப்பு அமைச்சுக்கு, அமைப்பு ஒன்று செய்த முறைப்பாட்டின் அடிப்படையில், இது தொடர்பான விசாரணைகளை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் ஆரம்பித்துள்ளதாக நிஹால் தல்துவ குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள் தொடர்பில் பலரும் வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்துக்கள் பற்றியும் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, இலங்கையின் உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புகள் என்ற தலைப்பில் செனல் 4 வெளியிட்ட காணொளி சுமார் 50 நிமிடங்களை கொண்டதாகும்.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 12 மணி நேரம் முன்

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

அமெரிக்காவை உலுக்கிய படுகொலையில் உக்ரைனுக்கு பங்கா? எம்.பி ஒருவரின் பேச்சால் அதிர்ச்சி News Lankasri
