பிள்ளையானும் கருணாவும் பிரிந்தபோது அதிகளவான இளைஞர்கள் படுகொலை: லவகுமார் குற்றச்சாட்டு
விடுதலைப்புலிகளில் இருந்து கருணா பிரிந்தபோது ஏற்பட்ட உயிரிழப்புகளை விட பிள்ளையானும், கருணாவும் பிரிந்தபோது அதிகளவான இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டதாக சிவில் சமூக செயற்பாட்டாளர் வி.லவகுமார் தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக வேட்புமனுவை இன்றைய தினம் (19) தாக்கல் செய்ததையடுத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக வேட்புமனு தாக்கல் செய்யும் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
வேட்பு மனு தாக்கல்
மட்டக்களப்பு பழைய மாவட்ட செயலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் அலுவலகத்தில் நேற்று முதல் இந்த வேட்பு மனு தாக்கல் செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந்தநிலையில், இன்றைய தினம் பல்வேறு சுயேட்சைக்குழுக்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளதுள்ள நிலையில் சிவில் சமூக செயற்பாட்டாளர் வி.லவகுமார் தலைமையில் வேட்பு மனுதாக்கல் செய்யப்பட்டது.
இதேவேளை இன்றைய தினம் போராட்ட மக்கள் முன்னணியும் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Viral Video: வீட்டிற்குள் பதுங்கியிருந்த நல்ல பாம்பு... காப்பாற்றி தண்ணீர் கொடுக்கும் இளைஞர் Manithan

சீன தயாரிப்பு விமானத்தால் பாகிஸ்தான் சுட்டு வீழ்த்திய 2 இந்திய விமானங்கள்: அமெரிக்க நிபுணர்கள் உறுதி News Lankasri
