இந்திய காஷ்மீர் இந்து ஆலய நெரிசலில் பலர் பலி: பலியானவர் எண்ணிக்கை உயரலாம் என்று அச்சம்
இந்திய காஷ்மீரில் மாதா வைஷ்ணவி தேவி பவனில் ஏற்பட்ட சன நெரிசலில் சிக்கி 12 அடியார்கள் உயிரிழந்தனர்.
இந்த உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
ஜம்மு மற்றும் காஷ்மீரின் கத்ரா நகரில் மாதா வைஷ்ணவி தேவி கோவில் அமைந்துள்ளது.
ஆண்டுதோறும் அடியார்கள், அதிக அளவில் இந்த கோவிலுக்கு யாத்திரையாக வந்து தரிசனம் செய்து விட்டு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
இந்தநிலையில் ஆங்கில புது வருட பிறப்பினை முன்னிட்டு மாதா வைஷ்ணவி தேவி பவன் பகுதியருகே கோவில் பக்தர்கள் அதிக அளவில் கூடியுள்ளனர்.
அவர்களில் ஒரு பிரிவினரிடையே இன்று அதிகாலை 2.45 மணியளவில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து சிலர், ஒரு பிரிவினரை தள்ளிவிட்டமையை அடுத்தே இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



காஷ்மீர் தாக்குதலில் திருமணமான 7 நாளில் உயிரிழந்த கணவர்.., தம்பதியினர் கடைசியாக எடுத்த வீடியோ வைரல் News Lankasri

தலைநகரில் இருந்து 600,000 மக்களை வெளியேற்றும் நேட்டோ உறுப்பு நாடு... புடினின் அடுத்த இலக்கு News Lankasri

viral video: சிறுவனின் மடியில் ஒய்யாரமாக ஓய்வெடுக்கும் ராட்சத மலைப்பாம்பு! மெய்சிலிர்க்கும் காட்சி Manithan

Baakiyalakshmi: தூக்கி வீசப்பட்ட மாமனார் புகைப்படம்! சுதாகருக்கு பாக்கியா விடுத்த எச்சரிக்கை Manithan

மகாநதி சீரியலில் அடுத்து விஜய்க்கும், வெண்ணிலாவிற்கும் திருமணம் நடக்கப்போகிறதா?.. படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam
