ஆயித்தியமலை புனித சதா சகாய மாதாவை நோக்கிய பாதயாத்திரை
மட்டக்களப்பு மாவட்டத்தின் மேற்கே அமைந்துள்ள கத்தோலிக்க ஆலயங்களுள் புகழ்பெற்ற ஆயித்தியமலை புனித சதா சகாய மாதா திருத்தலத்தை நோக்கிய பாதயாத்திரை இன்று இடம்பெற்றுள்ளது.
புனித சதா சகாய மாதா திருத்தலத்தின் 70ஆவது வருடாந்த திருவிழா கடந்த ஆகஸ்ட் மாதம் 30 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய நிலையில், இன்று(07) இன மத பாகுபடுன்றி பல்லாயிரக்கணக்கான மக்கள் ஆயித்தியமலை புனித சதா சகாய மாதாவை நோக்கிய பாதயாத்திரை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இரு வழிப் பாதயாத்திரை
குறித்த பாதயாத்திரையானது, மட்டக்களப்பு புனித மரியாள் பேராலயத்திலிருந்து ஆரம்பமாகி வவுணதீவு ஊடாகவும், மற்றைய யாத்திரை செங்கலடி புனித நிக்கலஸ் ஆலயத்திலிருந்து கரடியனாறு ஊடாகவும் இரு வழிப் பாதயாத்திரையாக ஆயித்தியமலை புனித சதா சகாய மாதா ஆலயத்தை வந்துள்ளது.
அத்துடன், அன்னையின் இறுதி பெருவிழா கூட்டுத்திருப்பலி மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் ஜோசப் பொன்னையா ஆண்டகை தலைமையில் நாளை(08) காலை 7 மணிக்கு இடம்பெற்று திருவிழா இனிதே நிறைவு பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.







அஜித் குமார் மரண வழக்கில் கைதான 5 காவலர்களையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு News Lankasri
