கட்டைக்காடு கப்பலேந்தி மாதா ஆலய பெருவிழா
வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டு கப்பலேந்தி மாத ஆலய வருடாந்திர திருவிழா சிறப்பாக இடம்பெற்றுள்ளது.
புனித பிரான்சிஸ் சவேரியார் குருத்துவக் கல்லூரி அதிபர் அருட்தந்தை தயாபரன் அடிகளார் தலைமையில் நேற்று(16) காலை 5.45 மணிக்கு குறித்த திருவிழா திருப்பலி ஆரம்பமாகியுள்ளது.
திருவிழா திருப்பலி
திருவிழாவின் இறுதியில் அன்னை மரியாள் ஆலயத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்டு பவனியாக கடற்கரை வீதியூடாக வலம் வந்துள்ளார்.

திருவிழா திருப்பலியில் அருட்தந்தை பத்திநாதர் அடிகளார், அருட்தந்தை ரமேஷ் அ.ம.தி,புனித பிரான்சிஸ் சவேரியார் குருத்துவக் கல்லூரியின் விரிவுச் செயலாளரும் யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளருமாகிய அருட்தந்தை ஜெயரஞ்சன் அடிகளார்,புனித பிரான்சிஸ் சவேரியார் குருமட விரிவுரையாளர் அருட்கலாநிதி கபில்ராஜ் அடிகளார்,மற்றும் கட்டைக்காடு கப்பலேந்தி மாதா ஆலய பங்குத்தந்தை அமல்ராஜ் அடிகளார் ஆகியோர் பெருவிழாவில் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த திருவிழா திருப்பலியில் பல்வேறு பிரதேசங்களில் இருந்தும் பக்த
அடிகளார்கள் வருகை தந்து அன்னையை தரிசித்தமை குறிப்பிடத்தக்கது.





மூன்றாம் உலகப்போர் வெடித்தால் சேமித்துவைக்கவேண்டிய 9 உணவுகள்: பிரித்தானிய நிறுவனம் ஆலோசனை News Lankasri
ரஞ்சி தொடரில் கருண் நாயர் 174 ரன் விளாசல்! அர்ஜுன் டெண்டுல்கர் 100 ஓட்டங்களுக்கு 3 விக்கெட் News Lankasri