தொற்றிலிருந்து வெளியேறிய நோயாளிகள் விடயத்தில் மருத்துவர்கள் உத்தரவாதம் அளிக்க முடியாது
கோவிட் தொற்றின் மூன்றாவது அலையினால் பாதிக்கப்பட்டநிலையில், மருத்துவமனைகளில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னரும் நோயாளிகள் விடயத்தில் மருத்துவர்கள் உத்தரவாதம் அளிக்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
ஏனெனில் கோவிட் தொற்றின் தாக்கச் சிக்கல்கள், தொடர்ந்தும் அவர்களுடன் வாழ்நாள் முழுவதும் இருக்கக்கூடும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பொதுக்குழு உறுப்பினர் கலாநிதி பிரசாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.
கோவிட் தொற்றின் நிமோனியாவுக்குப் பின்னர் ஏற்படும் சிக்கல்கள் சில நாட்களில் குணமடையாது. அதில் இருந்து நோயாளி ஒருவரை மீட்டெடுக்கும் காலம் நீடிக்கலாம். வாசனை உணர்வை இழப்பது போன்ற சில சிக்கல்கள் வாழ்நாள் முழுவதும் நீடிக்கும் என்று கொலம்பகே குறிப்பிட்டுள்ளார்.
கோவிட் தொற்றின் மூன்றாவது அலை, முதல் மற்றும் இரண்டாவது அலை போன்றது அல்ல., புதிய கோவிட் மாறுபாடு, நிமோனியாவுடன் போராட வேண்டிய ஒன்று. இதற்கு ஒக்சிஜனை நம்பியிருக்க வேண்டியுள்ளது என்று அவர் கூறியுள்ளார்.
எனவே, மருத்துவமனைகளில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னரும், கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும், மீண்டும் தொற்று ஏற்பட்டு சிக்கல்களில் சிக்கக்கூடாது என்று கொலம்பகே அறிவுறுத்தியுள்ளார்.
மாரடைப்பு, சுவாசக் கோளாறுகள் போன்ற சிக்கல்கள் கோவிட் வைரஸின் விளைவாகும் என்று அவர் தெரிவித்தார். எனவே தொற்றில் இருந்து மீண்டவர்களுக்கு மருத்துவர்கள் எந்த உத்தரவாதத்தையும் கொடுக்க முடியாது. அவர்களை வீட்டிற்கு சென்ற பின்னரும் , தமது உடல்நிலை குறித்து அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
அவர்கள் நோய் எதிர்ப்பு
சக்தியை அதிகரிக்க முயற்சிக்க வேண்டும் ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்வது
அவசியம் என்று கலாநிதி பிரசாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.
வைரஸ் தாக்கத்தில் இருந்து மீண்ட பின்னர் எவரும் மனநிறைவுடன் இருக்கக்கூடாது
என்றும் பிரசாத் கொலம்பகே எச்சரிக்கை விடுத்துள்ளார்.