தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் செயலால் அச்சத்தில் பெண்கள்! வெளியான அதிர்ச்சி வீடியோ (Video)
மட்டக்களப்பு மாவட்டத்தில் சின்ன உப்போடை பகுதியில் உள்ள கீறியோடை வாவிப்பகுதியில் சிசிரிவி கமரா பொருத்தப்பட்டுள்ள சம்பவம் மற்றும் மீன் வளர்ப்பு திட்டம் என்ற போர்வையில் வாவியை மறைத்து மீன் வளர்க்கப்படுகின்ற விடயங்கள் தொடர்பில் பிரதேச மக்களின் குற்றச்சாட்டிற்கு அமைய நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் உள்ளிட்ட குழுவினர் அப்பகுதிக்கு விஜயம் செய்து விடயங்களை ஆராய்ந்திருந்தனர்.
இதன்போது அப்பகுதி இளைஞரொருவர் கூறுகையில், பிரச்சினைகளை வெளியில் சொல்வதற்கு அனைவருக்கும் பயம்.
நாங்கள் பிரச்சினைகளை சொல்வதால் எங்களுக்கு பிரச்சினைகள் வரும். எமக்கு எதாவது நடந்தால் இவர்கள் தான் காரணம்.
நிசா, ரொனி, கிசோத்குமார், பைசல் ஆகியோரே இந்த நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள் என குறிப்பிட்டுள்ளார்.
முதலாம் இணைப்பு
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் இரு முக்கியஸ்தர்கள் துப்பாக்கிகளுடன் இருக்கும் புகைப்படம் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.
கொக்கு சுடுவதற்காக இந்த ஆயுதம் பாவிக்கப்படுவதாக கூறப்படுகின்ற போதிலும் எதிர்காலங்களில் மனிதர்களையும் வேட்டையாடலாம் என மக்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
அரசியல் கட்சியொன்றின் முக்கியஸ்தர்கள் மற்றும் மாநகரசபை உறுப்பினராக இருந்தவர்கள் இவ்வாறு ஆயுதங்களுடன் காட்சியளிப்பது பீதியை ஏற்படுத்தும் செயற்பாடாக இருக்கின்றதாகவும் சொல்லப்படுகிறது.
இது தொடர்பாக உடனடியாக பொலிஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கொக்குகள் மீது பாயும் குண்டுகள் மனிதர்கள் மீது பாய்வதற்கு முன் துரிதகதியில் நடவடிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மக்கள் தெரிவித்துள்ளதாக தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மட்டக்களப்பில் கனடாவாசியின் இரகசிய கமராவால் அச்சத்தில் உறையும் பெண்கள்! களத்தில் சாணக்கியன் (Video) |



படுக்கையில் நெப்போலியன் மகன்... எலும்பும் தோலுமாக மாறியதற்கு என்ன காரணம்? நேரில் சந்தித்த பிரபலம் Manithan

சாட்ஜிபிடி உதவியால் 46 நாட்களில் 11 கிலோ எடை குறைத்த நபர் - என்ன உணவுகள் எடுத்து கொண்டார்? News Lankasri
