முல்லைத்தீவில் காணாமல் போன இளைஞனின் தொலைபேசி மீட்பு: பொலிசார் விசாரணை
முல்லைத்தீவு - மாந்தை கிழக்கு பகுதியில் காணாமல் போன இளைஞனின் தொலைபேசி பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
மாந்தை கிழக்கு பகுதியில் கடந்த (05.11.2023) அன்று தனது மகனை காணவில்லை என தந்தை ஒருவரால் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டிருந்தது.
குறித்த முறைப்பாட்டிற்கமைய, பொலிஸார் தேடுதல் நடவடிக்கையை முடக்கி விட்டிருந்த சந்தர்ப்பத்தில், காணாமல் போன இளைஞரால் பாவிக்கப்பட்டதென நம்பப்படும் துவிச்சக்கரவண்டி முறைப்பாடு பதிவு செய்யப்படிருந்த பின் ஒரு சில நாட்களில் கண்டெடுக்கப்பட்டதுடன் விசாரணைகளும் இடம்பெற்றிருந்தன.
வழக்கு
இதேவேளை குறித்த இளைஞனின் வழக்கு முல்லைத்தீவு மாவட்டம் மாங்குளம் நீதவான் நீதிமன்றில் இடம்பெற்று வருகின்றது.
இதேவேளை, காணாமல் போன தனது சகோதரனின் தொலைபேசியை இளைஞர் ஒருவர் பாவனையில்
வைத்திருப்பதாக காணாமல் போன இளைஞனின் சகோதரனால் நட்டாங்கண்டல் பொலிஸாருக்கு
தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலதிக விசாரணைகள்
இந்த நிலையில், இன்று தொலைபேசி வைத்திருந்த குறித்த இளைஞரை அழைத்து சென்ற பொலிஸார் வாக்குமூலம் ஒன்றை பெற்றுக்கொண்ட பின்னர், வெளி பிரதேசங்களுக்கு செல்வதற்கான தடையினை விதித்து குறித்த இளைஞரை விடுவித்துள்ளனர்.
குறித்த தொலைபேசியை சான்று பொருளாக நீதிமன்றில் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்த பொலிஸார் காணாமல் போன இளைஞன் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





சரிகமப சீசன் 5 போட்டியாளர் பாடிக்கொண்டிருக்கும் போதே அவரது வீட்டில் ஏற்பட்ட உயிரிழப்பு... சோகமான அரங்கம் Cineulagam

சகோதரி மகள்களைக் காப்பாற்ற அருவிக்குள் குதித்த இலங்கைத் தமிழருக்கு நேர்ந்த துயரம்: சமீபத்திய தகவல் News Lankasri

Ehirneechal: மருத்துவமனையில் உயிருக்கு போராடும் ஈஸ்வரி- மருத்துவர்கள் சொன்ன அதிர்ச்சி தகவல் Manithan
