மோட்டார் பதிவு திணைக்களத்தின் 08 ஊழியர்களின் தொலைபேசி பதிவுகளை சரிபார்க்க நடவடிக்கை
மோட்டார் பதிவு திணைக்களத்தில் வைக்கப்பட்டிருந்த 12 கார் பதிவு புத்தகங்கள் காணாமல் போன சம்பவம் தொடர்பில் 08 ஊழியர்களின் தொலைபேசி பதிவுகளை சரிபார்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நாரஹேன்பிட்டி மோட்டார் பதிவுத் திணைக்களத்தின் வர்த்தக வாகன ஒதுக்கீட்டுப் பிரிவின் அலுவலக அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த 12 கார் பதிவுப் புத்தகங்கள் காணாமல் போயுள்ளன.
பதிவு புத்தகங்கள்
இந்நிலையில், சம்பவம் தொடர்பில் திணைக்களத்தின் ஊழியர்கள் 08 பேரின் தொலைபேசி பதிவுகளை பொரளை பொலிஸாரிடம் வழங்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுனாவல, சம்பந்தப்பட்ட தொலைபேசி நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்காக குறித்த திணைக்களத்தின் 08 ஊழியர்களின் தொலைபேசி பதிவுகளையும் வழங்குமாறு பொரளை பொலிஸார் விடுத்த கோரிக்கையை கருத்திற்கொண்டே நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
அதேவேளை, மோட்டார் பதிவுத் திணைக்களத்தின் வர்த்தக வாகன ஒதுக்கீட்டுப் பிரிவின் அலுவலக அறையில் வைக்கப்பட்டிருந்த, பயன்படுத்தப்படாத புதிதாக அச்சிடப்பட்ட புத்தகங்கள் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |