சரத் வீரசேகரவின் கருத்தை மறுத்துள்ள பொது சுகாதார ஆய்வாளர்கள்
பொது மக்கள் பாதுகாப்பு துறை அமைச்சர் சரத் வீரசேகர நாடாளுமன்றில் கூறிய கூற்றை பொது சுகாதார ஆய்வாளர்கள் மறுத்துள்ளனர்.
இதனையடுத்து நீதிமன்றங்களால் பிணை வழங்கப்பட்ட பின்னரும் எதிர்ப்பாளர்களை, தனிமைப்படுத்தல் மையங்களுக்கு வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்ல பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கைகளின் சட்டபூர்வமான தன்மை குறித்து கடுமையான அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த வாரம் இரண்டு வெவ்வேறு ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்றவர்களை, பொலிஸார் கைது செய்தனர், இதில் சிலரை மாத்திரம் நீதிமன்றம் பிணை வழங்கிய பின் தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அழைத்துச் சென்றனர்.
தனிமைப்படுத்தல் மையங்களுக்கு வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்லப்பட்டவர்களில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின், அனைத்திலங்கை பல்கலைக்கழக கூட்டமைப்பின் ரத்கராவ்வே ஜினாரத்தன தேரர் மற்றும் முன்னணி சோசலிஸ்ட் கட்சியின் உறுப்பினர் துமிந்த நாகமுவ ஆகியோர் அடங்குகின்றனர்.
தொற்று நெருக்கடி காரணமாக மேலதிக அறிவிப்பு வரும் வரை பொதுக் கூட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களை அனுமதிக்கக் கூடாது என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் பொலிஸ் மா அதிபருக்கு அளித்த அறிவுறுத்தல்களை மேற்கோளிட்டு அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்தநிலையில் பொது சுகாதார ஆய்வாளர்கள் உள்ளிட்ட சுகாதார அதிகாரிகளின் ஆலோசனையின் அடிப்படையில் ஆரப்பாட்டக்காரர்களை தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அழைத்துச் செல்வதற்கான முடிவு எடுக்கப்பட்டதாக அமைச்சர் சரத் வீரசேகர நாடாளுமன்றில் தெரிவித்த கூற்றை, பொது சுகாதார ஆய்வாளர்கள் மறுத்துள்ளனர்.
பொது சுகாதார ஆய்வாளர் சங்கத் தலைவர் உபுல் ரோஹன, நீதிமன்றில் பிணை வழங்கப்பட்ட எதிர்ப்பாளர்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்று தமது உறுப்பினர்கள் பரிந்துரைக்கவில்லை என்று கூறியுள்ளார்.
எந்தவொரு போராட்டக்காரர்களையும் அத்தகைய முறையில் தனிமைப்படுத்த வேண்டும் என்று பகுதி மருத்துவ சுகாதார அலுவலர் (MoH), அல்லது பொது சுகாதார ஆய்வாளர்கள் பரிந்துரைக்க முடியாது.
யாரைத் தனிமைப்படுத்தலாம் என்பதில் கடுமையான வழிகாட்டுதல்கள் உள்ளன என்று உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri
