இலங்கைக்கு பயணத் தடை விதித்தது பிலிப்பைன்ஸ்!
கோவிட் தொற்று மிக வேகமாக பரவி வரும் நிலையில், பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் இருந்து வரும் பயணிகள் நுழைவதற்கு பிலிப்பைன்ஸ் தடை விதித்துள்ளது.
அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, மே 7ம் திகதி முதல் 14ம் திகதி வரை குறித்த நாடுகளில் இருந்து வரும் பயணிகள் நாட்டிற்குள் நுழைவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நாடுகளுக்கு சென்ற பயணிகள் 7ம் திகதிக்கு முன்னர் நாடு திரும்பினால் நாட்டிற்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்படாது. எனினும், அவர்கள் 14 நாள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த வேண்டியிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏவ்வாறாயினும், தற்போதைய தடைகள் மற்றும் நடைமுறைகள் பொதுவாக வரும் பயணிகளுக்கு பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 1ஆம் திகதிக்கு முன் இந்த 9 பொருட்களையும் தயாராக வைத்துக்கொள்ளுங்கள்: பிரித்தானியர்களுக்கு ஒரு அவசர செய்தி News Lankasri
வெள்ளையர்கள்தான் பிரித்தானிய குடிமக்கள்... பிரித்தானியாவில் அதிகரித்துவரும் வலதுசாரிக் கொள்கைகள் News Lankasri
கடை திறக்க போராடும் ஜனனி, ஸ்பெஷல் என்ட்ரி கொடுத்த நடிகை... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam