கலாநிதி பட்ட சர்ச்சை: தொடர் சிக்கலில் ரன்வல
கலாநிதிப்பட்டத்தின் காரணமாக சபாநாயகர் பதவியில் இருந்து விலகிய செய்த அசோக ரன்வல தொடர்பில் மீண்டும் கேள்விகள் வெளிவர ஆரம்பித்துள்ளன.
கடந்த பொதுத் தேர்தலில் கம்பஹா மாவட்டத்தில் போட்டியிட்ட அசோக ரன்வெல(Asoka Sapumal Ranwala), ஜப்பானிய வசோடா பல்கலைக்கழகத்தின் கலாநிதிப் பட்டதாரியாக தன்னை அறிமுகம் செய்து கொண்டார்.
அதனடிப்படையில் அவருக்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் சபாநாயகர் பதவியும் வழங்கப்பட்டது.
கலாநிதிப் பட்டம்
எனினும் அவரது கலாநிதிப் பட்டம் போலியானது என்று கடுமையான எதிர்ப்பலை கிளம்பிய நிலையில், அதனை இரண்டு மாதங்களுக்குள் நிரூபிப்பதாகவும், அதுவரை சபாநாயகர் பதவியில் இருந்து விலகிக் கொள்வதாகவும் தெரிவித்து அவர் அறிக்கையொன்றை வெளியிட்டு, கடந்த டிசம்பரில் பதவியில் இருந்து விலகியிருந்தார்.
இந்நிலையில் அவர் குறிப்பிட்ட இரண்டு மாதங்கள் கடந்த நிலையில், அவரது வாக்குறுதி குறித்த சர்வதேச ஊடகம் ஒன்று கேள்வியெழுப்பியுள்ளது.

நாடாளுமன்றம் என்பது கல்வித் தகைமைகளை சமர்ப்பிக்க வேண்டிய இடம் அல்லவென்றும், தனது கல்வித் தகைமை குறித்து அறிந்து கொள்ளும் தேவை பொதுமக்களுக்கு இல்லையென்றும் அவர் பதிலளித்ததாக குறித்த ஊடக செய்தியில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் ரன்வல தொடர்பான கேள்விகளும் தற்போத சமூக ஊடக பரப்பில் வெளிப்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
போதைப்பழக்கத்தில் சிக்கிய கேப்டன்: இனி அணியில் எடுக்க மாட்டோம்..கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம் News Lankasri
கோவை மாணவி துஷ்பிரயோகம்: முதலில், அந்தப் பெண் தவறு: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்து News Lankasri
ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri