300 குழந்தைகள் பரிதாபமாக பலி! மருந்து நிறுவனங்கள் தொடர்பில் உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட தகவல்
குழந்தைகளுக்கான இருமல் மருந்தில் டைதிலீன் கிளைகோல் மற்றும் எத்திலீன் கிளைக்கால் அதிகளவு இருந்ததால், அவற்றை கடந்த 4 மாதங்களில் சாப்பிட்ட குழந்தைகள் பலர் இறந்திருப்பது உலகளவில் பேசுப்பொருளாகியுள்ளது.
இப்படி 7 நாடுகளில் 5 வயதுக்குட்பட்ட 300 குழந்தைகளின் இறப்புகள் பதிவாகி உள்ளன.
உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை
அரியானாவை சேர்ந்த மெய்டன் பார்மசியூடிக்கல் நிறுவனம் தயாரித்த இருமல் மருந்து குறித்து கடந்த அக்டோபர் மாதம் உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நவம்பரில் இந்தோனேசிய மருந்து நிறுவனம் தயாரித்த மருந்துகள் மீதும் உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்தது.
தரம் குறைந்த இருமல் மருந்துகள்
இந்த மாத தொடக்கத்தில் இந்தியாவில் உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள மரியான் பயோடெக் நிறுவனம் தயாரித்த தரம் குறைந்த இருமல் மருந்து குறித்து உலக சுகாதார நிறுவனம் எச்சரித்தது.
இந்த மருந்து குடித்து உஸ்பெகிஸ்தானில் 8 குழந்தைகள் இறந்துள்ளன. இந்த நிலையில் தரம் குறைந்த இருமல் மருந்துகளை தயாரித்து அளித்த மருந்து நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட நாடுகளை உலக சுகாதார நிறுவனம் வலியுறுத்தி உள்ளது.

பதினாறாவது மே பதினெட்டு 22 மணி நேரம் முன்

ரஷ்யாவின் கேபிள் தாக்குதலை முறியடிக்க "இராஜ ட்ரோன் நீர்மூழ்கி" கப்பலை வடிவமைத்த பிரித்தானியா News Lankasri

Brain Teaser Maths: நீங்கள் இடது மூளை புத்திசாலி என்றால் இந்த விநாக்குறியில் வரும் விடை என்ன? Manithan

கோடிக்கணக்கில் செலவு செய்து பிள்ளைகளை கனடாவுக்கு அனுப்பாதீர்கள்: எச்சரிக்கும் தொழிலதிபர் News Lankasri
