இலங்கையில் பதிவு செய்யப்பட்ட மருந்து நிறுவனங்கள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை
இலங்கையில் பதிவு செய்யப்பட்ட அனைத்து மருந்து நிறுவனங்கள் தொடர்பிலும் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு குற்றப்புலனாய்வு திணைக்களம் பணிக்கப்பட்டுள்ளது.
குற்றப்புலனாய்வு பிரிவிற்கு பொறுப்பான பொலிஸ்துறை அதிகாரி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தின் பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ஊழல் தொடர்பான விசாரணைகள்
இதன்படி அண்மையில் மருந்து ஊழலில் ஈடுபட்ட நிறுவனத்திற்கு மருந்துகள் விநியோகித்த நிறுவனங்கள் மீது அதிகாரிகள் கூடுதல் ஆய்வு நடத்துவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் மனித இம்யூனோகுளோபுலின் ஊழல் தொடர்பான விசாரணைகளை தீவிரப்படுத்த வேண்டியதன் அவசியமும் இந்த கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஏற்கனவே முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, முன்னாள் அமைச்சின் செயலாளர் ஜனக சிறிசந்திரகுப்த மற்றும் பலர் தற்போது இந்த ஒப்பந்தம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையிலேயே இந்த விடயம் குறித்து ஆராயப்பட்டுள்ளது.
அமெரிக்க ஒப்பந்தத்தை மறுத்தால் ஜெலென்ஸ்கி கொல்லப்படலாம்... ரஷ்யாவில் இருந்து கசிந்த தகவல் News Lankasri