11 பாடசாலைகளைச் சேர்ந்த 2000 இற்கும் அதிகமான மாணவர்களுக்கு பைசர் தடுப்பூசி
ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட தமிழ் மற்றும் சிங்கள 11 பாடசாலைகளைச் சேர்ந்த 2000 இற்கும் அதிகமான மாணவர்களுக்கு இன்று (27) பைசர் முதலாவது தடுப்பூசியினை பெற்றுக்கொடுக்க நடவடிக்கைகள் மேற்கொண்டிருப்பதாக ஹட்டன் பிரதேச பொது சுகாதார பரிசோதகர் ராமையா பாலகிருஷ்ணன் (Ramaya Balakrishnan) தெரிவித்துள்ளார்.
கோவிட் தொற்று பரவலிருந்து மாணவர்களை பாதுகாப்பதற்காக அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இதில் முதன்மையாக தடுப்பூசிகள் பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கைகள் தற்போது நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதற்கமைய நுவரெலியா மாவட்டத்தில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசிகள் பெற்றுக்கொடுக்கும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட ஹட்டன் ஹைலன்ஸ் மத்திய கல்லூரி, ஸ்ரீ பாத சிங்கள மகா வித்தியாலயம், புனித ஜோன் பொஸ்கோ கல்லூரி, புனித கப்பிரியல் மகளிர் பாடசாலை, பன்மூர் தமிழ் மகா வித்தியலாயம், டிக்கோயா நுண்கலை கல்லூரி உள்ளிட்ட 11 பாடசாலைகளைச் சேர்ந்த சுமார் 2000 இற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கே தடுப்பூசி பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.
குறித்த தடுப்பூசிகள் தரம் 11, 12,13 ஆகிய வகுப்புக்களில் கல்வி பயிலும் 16 வயதிற்கு மேற்பட்ட 19 வயதிற்கு குறைந்த மாணவர்களுக்கு பெற்றுக்கொடுக்கப்படவுள்ளன.
இந்த தடுப்பூசிகள் இரண்டாவது தடைவையாக பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களும் பெற்றுக்கொள்ள முடியுமெனவும் இது குறித்து சந்தேகங்கள் ஏற்படும் பட்சத்தில் உரிய பாடசாலை அதிபர் மற்றும் வலயக் கல்விப்பணிப்பாளர், பொது சுகாதார பரிசோதகர், அம்பகமுவ பிரதேச பொது சுகாதார வைத்திய அதிகாரி ஆகியோரை தொடர்பு
கொண்டு சந்தேகங்களை தீர்த்து கொள்ள முடியுமெனவும், அந்ததந்த பாடசாலைகளுகளில் உள்ள மாணவர்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் பாடசாலைக்கு சென்று கேட்கப்பட்ட விபரங்களை வழங்கி தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள முடியுமெனவும்
ஹட்டன் பொது சுகாதார பரிசோதகர் ராமையா பாலகிருஸ்ணன் மேலும் தெரிவித்துள்ளார்.

பதினாறாவது மே பதினெட்டு 4 நாட்கள் முன்

விசா கட்டுப்பாடுகள்: பிரித்தானியாவை விட்டு வெளியேறிய பல்லாயிரக்கணக்கான வெளிநாட்டவர்கள் News Lankasri
