60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை
60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கோவிட் தொற்றுக்கு எதிரான பூஸ்டர் தடுப்பூசியை வழங்கும் நடவடிக்கை இன்று ஆரம்பமாகவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
மேல் மற்றும் தென் மாகாணங்களிலும் அநுராதபுரம் மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் இந்த திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் பைசர் தடுப்பூசி 1 மில்லியன் பாடசாலை மாணவர்களுக்கு போடப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
மேலும், 120,485 பேருக்கு பூஸ்டர் டோஸாக ஃபைசர் தடுப்பூசி போடப்பட்டுள்ளதுடன்,
இலங்கையில் 1.5 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு கோவிட் தடுப்பூசியின் முதல் டோஸ் வழங்கப்பட்டுள்ளதாகவும், இரண்டாவது டோஸ் 36 மில்லியன் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 2 நாட்கள் முன்

Ethirneechal: விஷ பாம்பாக மாறிய குணசேகரன்.. நடுசாமத்தில் பதறிய நந்தினி- இது எப்படி முடிவுக்கு வரும்? Manithan

அடுத்த வாரம் கண்டிப்பாக சம்பவம் இருக்கு, முத்துவிடம் சிக்கிய ரோஹினி.. சிறகடிக்க ஆசை அடுத்த வார புரொமோ Cineulagam
