க.பொ.த உயர்தர மாணவர்களுக்கு பைசர் தடுப்பூசி ஏற்றும் பணி முன்னெடுப்பு
நாடளாவிய ரீதியில் பல இடங்களில் க.பொ.த உயர்தர பரீட்சை எழுதும் மாணவர்களுக்கான 1 ஆம் கட்ட பைசர் தடுப்பூசி ஏற்றும் பணி இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மண்முனை வடக்கு பிரதேசம்
மண்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட இரு கிராம சேவகர் பிரிவுகளில் இம்முறை க.பொ.த உயர்தர பரீட்சை ஏழுதும் மாணவர்களுக்கு 1ஆம் கட்ட தடுப்பூசி ஏற்றும் பணி இன்று மண்முனை வடக்குப் பிரதேச பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் எஸ்.கிரிசுதன் (S.Girisudhan) தலைமையில் 4 இடங்களில் இடம்பெற்றுள்ளன.
இங்கு சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி 16 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான தடுப்பூசி இன்று எற்றப்பட்டுள்ளது.
மண்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட இரு கிராம சேவகர் பிரிவுகளிலுள்ள பாடசாலைகளில் 16 வயதுக்கு மேற்பட்ட 448 மாணவர்களுக்கான தடுப்பூசியானது காலை 9 மணிமுதல் எற்றப்பட்டுள்ளது.
இதில் மாகஜன கல்லூரி மற்றும் கல்லடி விவேகானந்தா மற்றும் விபுலானந்தா ஆகிய பாடசாலைகளில் 16 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான இன்று 1ஆம் கட்ட தடுப்பூசி எற்றப்பட்டது.
இதில் மட்டு கல்வி வலயப்பணிப்பாளர் சுஜாத்தா குலேந்திரகுமார் (Sujatha Kulendrakumar) மற்றும் மட்டு வலய கோட்டை கல்வி அதிகாரி ஆகியோர் கலந்து கொண்டு மேற்பார்வையிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கிழக்கு மாகாணம்
கிழக்கு மாகாணத்தில் உள்ள உயர்தர பாடசாலை மாணவர்களுக்கான பைசர் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் இன்று (21) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஏ.ஆர்.எம்.தௌபீக் (A.R.M.Thoubeek) தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு இன்று (21) வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
பாடசாலை மாணவர்களாகிய 16,17,18,19 வயதினர் பிரிவினைக் கொண்ட மாணவர்கள் அருகாமையில் உள்ள பாடசாலைக்கு சென்று பைசர் தடுப்பூசியினை பெறலாம்.
குறித்த பகுதியில் தடுப்பூசி மையம் இல்லையெனில் அருகாமையில் உள்ள மையத்துக்கு சென்று தடுப்பு மருந்தை பெறலாம் . மாணவர்கள் இது குறித்த விடயத்தில் கவனத்திற் கொண்டு இத் தடுப்பு மருந்துகளை பெறுவது சிறந்தது என தெரிவித்துள்ளார்.
மன்னார் மாவட்டம்
மன்னார் மாவட்டத்தில் க.பொ.த உயர் தர பரிட்சைக்கு தோற்றுகின்ற மாணவர்களுக்கான 'பைஸர்' முதலாவது தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் இன்றைய தினம் (21) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன்(R. Vinodhan) தலைமையில், மன்னார், நானாட்டான், முசலி, மாந்தை மேற்கு மற்றும் மடு ஆகிய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில், தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளில் இன்றைய தினம் காலை 9 மணி முதல் குறித்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இவ்வருடம் க.பொ.த உயர்தர பரீட்சைக்கு முதல் தடவை மற்றும் 2 வது தடவையாக தோற்றும் மாணவர்களுக்கு கோவிட் தடுப்பூசியான பைஸர் தடுப்பூசியின் முதலாவது தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தடுப்பூசி செலுத்தும் நிலையங்களான பாடசாலைகளில் சுகாதார வைத்திய அதிகாரிகள், பொது சுகாதார பரிசோதகர்கள், வைத்தியசாலை பணியாளர்கள் , இராணுவம் மற்றும் விமானப்படை ஆகியோரின் ஒத்துழைப்புடன் மன்னார் மாவட்டத்தில் உயர் தர பரிட்சைக்கு தோற்றுகின்ற மாணவர்களுக்கான பைஸர் முதலாவது தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது.
இதன் போது மாணவர்கள் ஆர்வத்துடன் சென்று தடுப்பூசியை பெற்றுக்கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.
வவுனியா
வவுனியாவில் பாடசாலை மாணவர்களுக்கு பைசர் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய பாடசாலையில் இன்று (21) காலை முன்னெடுக்கப்பட்டது.
வடமாகாணத்தில் இன்று முதல் பாடசாலை மாணவர்களுக்கு பைசர் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது. அதற்கமைவாக வவுனியா மாவட்டத்தில் முதல் கட்டமாக வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த 18, 19 வயது மாணவர்களுக்கு பைசர் தடுப்பூசிகள் ஏற்றப்பட்டன.
வவுனியா தமிழ் மத்திய மாகாவித்தியாலயத்தில் காலை 9.30 மணியளவில் ஆரம்பிக்கப்பட்ட குறித்த செயற்றிட்டத்தின் ஒழுங்குகளை காலை 9 மணியளவில் வட மகாண கல்வி அமைச்சின் செயலாளர் நேரடியாக வந்து பார்வையிட்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து ஏனைய பாடசாலை மாணவர்களுக்கு கட்டம் கட்டமாக தடுப்பூசிகளை ஏற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணம்
யாழ்ப்பாணத்தில் உள்ள பாடசாலை மாணவர்களிற்கு தடுப்பூசி ஏற்றும் பணிகள் இன்று ஆரம்பமானது.
17 ,18 வயது மாணவர்களுக்கே குறித்த பைசர் தடுப்பூசி ஏற்றும் பணிகள் இடம் பெற்று வருகின்றன.
க.பொ.த உயர்த்தர மாணவர்கள் மற்றும் இடைவிலகிய மாணவர்களிறக்குமே இத் தடுப்பு ஊசி ஏற்றப்படுவது குறிப்பிட தக்கது.
மட்டக்களப்பு
மட்டு.மாவட்டத்தில் முதல் தடவையாக உயர்வகுப்பு மாணவர்களுக்கு பைஸர் தடுப்பூசி ஏற்றும் பணிகள் ஆரம்பம்
உயர்வகுப்பு மாணவர்களுக்கு கோவிட் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைககள் (21) முதன் முறையாக மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆரம்பாகியுள்ளன.
மட்டககளப்பு மகாஜன கல்லூரி மண்டபத்தில் காலை தடுப்பூசி ஏற்றும் பணிகள் இடம் பெற்றன. மட்டக்களப்பு சுகாதார வைத்தியதிகாரி டாக்டர் இ.உதயகுமார்(E. Udayakumar) முன்னிலையில் தடுப்பூசி ஏற்றும் பணிகள் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
பைஸர் தடுப்பூசிகளே இவ்வாறு ஏற்றப்படுவதாக கோட்டைமுனை பொது சுகாதார பரிசோதகர் ரி.மிதுன்ராஜ் (R.Mithunraj) தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி
கிளிநொச்சி பாடசாலை மாணவர்களிற்கு தடுப்பூசி ஏற்றும் பணிகள் இன்று ஆரம்பமானது.
இன்று காலை முதல் குறித்த பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது குறிபிடத்தக்கது.

இந்தியாவின் தக்க பதிலடி... துருக்கி, அஜர்பைஜானுக்கு பறக்கும் பாகிஸ்தான் பிரதமர்: அவரது திட்டம் இதுதான் News Lankasri
