மன்னார் மாவட்டத்தில் பைஸர் கோவிட் 2 ஆவது தடுப்பூசி செலுத்தும் பணி முன்னெடுப்பு
மன்னார் மாவட்டத்தில் இன்றைய தினம்(10) காலை தொடக்கம் 'பைஸர்' கோவிட் தடுப்பூசியின் 2 ஆவது தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்டத்தில் உள்ள கரையோர பிரதேசங்களில் உள்ள அபாயம் கூடிய கிராமங்கள் அடையாளம் காணப்பட்டு முன்னுரிமை வழங்கப்பட்டு குறித்த கிராமங்களைச் சேர்ந்த 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முதலாவது 'பைஸர்' கோவிட் தடுப்பூசி கடந்த மாதம் 10 ஆம் திகதி முதல் வழங்கப்படுகிறது.
இந்த நிலையில் பைஸர் தடுப்பூசியின் 2 ஆவது தடுப்பூசி வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் இன்றைய தினம்(10) முதல் மாவட்டத்தில் குறிப்பிட்ட சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு ஊடாக வழங்கப்பட்டு வருகிறது.
இன்று(10) காலை முதல் தலைமன்னாரில் இருந்து குறித்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து மாவட்டத்தில் உள்ள பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு ஊடாக கோவிட் தடுப்பூசி செலுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.










