அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பிற்கான காரணத்தை வெளியிட்டுள்ள அமைச்சர்
அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்துள்ளமை காரணமாக மக்கள் சிரமங்களுக்கு உள்ளாகி இருப்பது உண்மை என அமைச்சர் காமினி லொக்குகே (Gamini Lokuge) தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
எனினும் சமையல் எரிவாயு, கோதுமை மா போன்றவற்றின் விலைகள் அரசாங்கத்தின் தவறால் அதிகரிக்கவில்லை.
டொலரின் விலை அதிகரித்துள்ளதால், அவற்றின் விலைகள் அதிகரித்துள்ளன. உலக சந்தையில் பொருட்களின் விலைகள் அதிகரிக்கும் போது, அதிகரிக்கப்பட்ட பொருட்களை குறைந்த மானிய விலையில் வழங்க நாட்டில் நிதி ரீதியான பலம் இல்லை. பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தற்போது நஷ்டத்தில் இயங்கி வருகின்றது.
அந்த நஷ்டத்தை அரசாங்கம் ஈடு செய்து, எரிபொருளை மானிய விலையில் வழங்கி வருகின்றது எனவும் காமினி லொக்குகே குறிப்பிட்டுள்ளார்.

பாக்கியலட்சுமி சீரியல் நடிகையின் மருமகளுக்கு குழந்தை பிறந்தது.. நடிகை வெளியிட்ட மகிழ்ச்சியான வீடியோ Cineulagam
