எரிபொருள் நெருக்கடி! பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திற்கு முன்பாக வெடிக்கவுள்ள போராட்டம்
நாட்டின் அனைத்து எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களும் நாளை (06) முற்பகல் 9.30 மணி முதல் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு முன்னால் அமைதிப் போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கத்தின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் டி.வி. சாந்த சில்வா இதனை தெரிவித்துள்ளார்.
போர்க்களத்தில் களமிறக்கப்படும் அதி சக்திவாய்ந்த வான் பாதுகாப்பு அமைப்பு! ஈரானின் எச்சரிக்கையினால் மீண்டும் பதற்றம்
ஒற்றை மற்றும் இரட்டை இலக்க முறைமை
எரிபொருள் விநியோகத்தின் போது பின்பற்றப்படும் ஒற்றை மற்றும் இரட்டை இலக்க முறைமையினால் எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளே இந்த போராட்டத்திற்கான பிரதான காரணம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் விலை சூத்திரத்தின்படி, பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் ஏனைய நிறுவனங்கள் 6% இலாபத்தைப் பெற்றுக்கொள்வதாகவும், எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு 3% இலாபப் பங்கு வழங்கப்பட வேண்டும் என்ற போதிலும், கூட்டுத்தாபனத்தின் புதிய நிர்வாகத்தினால் அது வெட்டப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஓடர் செய்யப்பட்ட டீசல் மற்றும் பெற்றோல் முறையாக வழங்கப்படாததால், எரிபொருள் நிரப்பு நிலையங்களை நடத்திச் செல்வதில் கடும் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளதாகவும் டி.வி. சாந்த சில்வா சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழ் புத்தாண்டு சிறப்பு திரைப்படம்.. கலைஞர் டிவியில் முதல் முறையாக ஒளிபரப்பாகும் முன்னணி ஹீரோவின் படம் Cineulagam
48 மணி நேரத்தில் நரக மழை பொழியும் - ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை News Lankasri