இலங்கையில் பெற்றோல் விலை 800 ரூபாவாக அதிகரிக்கும் சாத்தியம்
எதிர்காலத்தில் பெற்றோல் விலையை சுமார் 800 ரூபாவாக அதிகரிப்பதற்கக QR முறையை இல்லாதொழிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இது தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவிடம் வினவிய போது அவர் அதனை நிராகரித்துள்ளார்.
தற்போது அவ்வாறான திட்டங்கள் எதுவும் இல்லை எனவும், எரிபொருளின் விலை 10 - 15 ரூபா வரையில் மாறலாம்.
ஆனால் உக்ரைன்-ரஷ்யா யுத்தம் போன்ற உலக நிலைமைகளை தன்னால் கட்டுப்படுத்த முடியாது.
அந்த சந்தர்ப்பங்களில் விலை எவ்வளவு உயரும் என கூற முடியாது. அத்தகைய சூழ்நிலையில் விலை கூடி குறைய கூடும்.
அடுத்த மூன்று மாதங்களில் QR முறை முற்றாக ஒழிக்கப்படும். விரைவில் மேலும் மூன்று நிறுவனங்கள் இலங்கையில் எரிபொருள் சந்தைக்குள் பிரவேசிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தொலைக்காட்சியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 5 நாட்கள் முன்

15 வயதுக்கு கீழ் உள்ள பிள்ளைகள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை: பிரான்ஸ் ஆணையம் பரிந்துரை News Lankasri

வெளிநாட்டவர் வேலைவாய்ப்பிற்கு சிக்கல் - பிரித்தானியாவில் 2000 நிறுவனங்களின் விசா ஸ்பான்சர் உரிமங்கள் ரத்து News Lankasri
