லங்கா ஐ.ஓ.சியின் எரிபொருள் விலையிலும் மாற்றம்!
புதிய இணைப்பு
பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் விலைத் திருத்தத்திற்கு அமைய தமது எரிபொருட்களின் விலைகளும் திருத்தப்படுவதாக லங்கா ஐஓசி நிறுவனம் அறிவித்துள்ளது.
அத்துடன் பெட்ரோலை தவிர ஏனைய எரிபொருட்களின் விலைகள் மாற்றமின்றி இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ரூபாய் 309 ஆக இருந்த ஒக்டேன் 92 பெட்ரோல் லீட்டரின் விலை ரூபாய் 10 ஆல் குறைக்கப்பட்டுள்ள நிலையில், அதன் புதிய விலை ரூபாய் 299 ரூபாவாகும்.
அதேபோல், ஒக்டேன் 95 பெட்ரோல் லீட்டரின் விலை ரூபாய் 10 ஆல் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 361 ரூபாவாகும்.
முதலாம் இணைப்பு
மாதாந்திர எரிபொருள் விலையில் இன்று(31) திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்படி பெற்ரோல் விலை குறைக்கப்பட்டுள்ளதுடன் ஏனைய எரிபொருட்களின் விலைகளில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
விலை குறைப்பு
இன்று (31) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருள் விலைகளை குறைத்துள்ளது.
ஒக்டேன் 92 பெற்ரோல் லீட்டர் ஒன்றின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 299 ரூபாவாகும்.
அதேபோல், ஒக்டேன் 95 பெற்ரோல் லீட்டர் 10 ரூபாவினால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 361 ரூபாவாகும்.
இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் கடந்த முறை மாதாந்திர எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளவில்லை.
திருத்தம்
அதன்படி,92 ரக பெட்ரோலானது 309.00 ரூபாவுக்கும், 95 பெற்ரோல் 95 ரக பெட்ரோலானது 371.00 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்பட்டது. இவை இம்மாத திருத்தத்தில் 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளன.
ஆனால் ஏனைய எரிபொருட்களை எந்த மாற்றமும் இன்றி அதே விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றன.
அதன்படி, லங்கா வெள்ளை டீசல் 286.00 ரூபாவுக்கும் , சூப்பர் டீசல் 331.00 ரூபாவுக்கும் மற்றும் மண்ணெண்ணெய் 183 ரூபாவுக்கும் என்ற அதே விலையில் விற்பனை செய்யப்படும் என்று கூட்டுத்தாபனம் கூறியுள்ளது.

சர்வதேச அரசியலில் ஈழத் தமிழர்களின் பயணப்பாதை 2 நாட்கள் முன்

ரசிகர்கள் ஆவலுடன் பார்க்கும் மகாநதி சீரியலில் டுவிஸ்ட் வைத்த இயக்குனர்.. வைரலாகும் போட்டோ Cineulagam
