எதிர்வரும் திங்கட்கிழமை எரிபொருள் விலையில் மாற்றம் ஏற்படும் சாத்தியம்
எதிர்வரும் திங்கட்கிழமை எரிபொருள் விலையில் மாற்றம் ஏற்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
எரிபொருள் விலை திருத்தம் தொடர்பிலான மேலதிக கலந்துரையாடல்கள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரியவருகிறது.
இதற்கமைய, எதிர்வரும் திங்கட்கிழமை விலை திருத்தம் செய்யப்படுமா? இல்லையா? என்பது தொடர்பில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விலை திருத்தம்
மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கமைய, நேற்று நள்ளிரவு முதல் உரிய விலைகள் திருத்தப்பட்டிருக்க வேண்டும்.
என்ற போதும் நேற்றைய தினம் (29.02.2024) எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படவில்லை.
இதேவேளை, மின்சாரக் கட்டண திருத்தம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இன்று (01.03.2024) மீண்டும் கூடவுள்ள நிலையில் குறித்த கலந்துரையாடல் இன்று பிற்பகல் 3 மணிக்கு இடம்பெறும் என தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 32 நிமிடங்கள் முன்

viral video: நபரொருவரின் சப்பாத்தை பதம் பார்த்த ராஜ பழுப்பு பாம்பு... மெய்சிலிர்கும் காட்சி! Manithan

18 வயதிலே CEO; ஆண்டுக்கு ரூ.256 கோடி வருமானம் - படிக்க சீட் வழங்க மறுக்கும் பல்கலைகழகங்கள் News Lankasri
