மீண்டும் எரிபொருள் விலையை உயர்த்த வேண்டிய கட்டாயம்..! அரச தரப்பிலிருந்து வெளியான முக்கிய தகவல்
எரிபொருள் விலைகளை மேலும் உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்படும் என வலுசக்தி அமைச்சின் செயலாளர் உதயங்க ஹேமபால தெரிவித்துள்ளார்.
எரிபொருள் விலைகளைத் தீர்மானிக்கும் தற்போதைய நடைமுறைக்கு சர்வதேச நாணய நிதியம் அனுமதி வழங்கத் தவறினால் இந்த நிலைமை ஏற்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மானியம்
அவர் மேலும் தெரிவிக்கையில், மே மாதம் 1 ஆம் திகதி வரை டீசல் லீற்றர் ஒன்றுக்கு 100 ரூபாவையும், பெட்ரோல் லீற்றர் ஒன்றுக்கு 20 ரூபாவையும் அரசாங்கம் மானியமாக ஏற்றுக்கொண்டுள்ளது.
இந்த மானியத்தைத் தொடர வேண்டுமானால், சர்வதேச நாணய நிதியத்தின் அனுமதி கிடைக்க வேண்டும்.

அத்துடன் மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலும் இதில் தாக்கம் செலுத்தும்.
மேலதிக தொகை
ஒருவேளை சர்வதேச நாணய நிதியம் அனுமதி வழங்காவிட்டால், அந்த மேலதிகத் தொகையை (பெட்ரோலுக்கு 20 ரூபா, டீசலுக்கு 100 ரூபா) நுகர்வோர் மீதே சுமத்த வேண்டியிருக்கும் என குறிப்பிட்டுள்ளார்.