1220 லீட்டர் பெட்ரோலைப் பதுக்கி வைத்திருந்த இலங்கையர்! கையும் களவுமாக சிக்கினார்..
கிளிநொச்சி - இராமநாதபுரம், கல்மடுநகர் பகுதியில் பெருமளவில் டீசல் மற்றும் பெட்ரோல் உள்ளிட்டவற்றை பதுக்கி வைத்திருந்த நபர் ஒருவரை நேற்றையதினம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த சந்தேகநபரிடம் இருந்து 1220 லீட்டர் பெட்ரோல் மற்றும் 530 லீட்டர் டீசல் என்பனவற்றை பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
மேலதிக விசாரணை
பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் 247 லீட்டர் டீசலும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன், கைது செய்யப்பட்ட சந்தேகநபரையும், கைப்பற்றப்பட் எரிபொருட்களையும் நீதிமன்றத்தில் பிரசன்னப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.



புதன் உருவாகும் நீச்சபங்க ராஜயோகம்: ஏப்ரலில் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! Manithan