பெட்ரோல் பௌசர் மரத்துடன் மோதி விபத்து: உயிர்தப்பிய ஓட்டுநர்
ஹபரணைப் பக்கமிருந்து திருகோணமலை நோக்கிப் பயணித்த பெட்ரோல் பௌசர் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்து இன்று(26.02.2026) அதிகாலை இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்து
கந்தளாய், 93ஆம் கட்டைப் பகுதியில் அதிகாலை சுமார் 2.00 மணியளவில் குறித்த பெட்ரோல் பௌசர் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி, அருகில் இருந்த மரத்துடன் மோதியுள்ளது.

இந்தக் கோர விபத்தில்பெட்ரோல் பௌசரின் முன்பகுதி பலத்த சேதமடைந்துள்ளது. எனினும், பவுசரின் சாரதி எந்தவிதக் காயங்களுமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பியுள்ளார்.
விபத்து இடம்பெற்ற போது சாரதி தூக்கக் கலக்கத்தில் இருந்தமையே விபத்துக்கான காரணம் என ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தளாய் பொலிஸ் நிலையம் மேற்கொண்டு வருகின்றது.
குந்தவை சர்ச்சைக்கு பின்... முதல்வர் விஜய் - பார்திபனின் முதல் சந்திப்பு! படுவைரலாகும் புகைப்படங்கள் Manithan
சீனாவால் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்... பிரித்தானியா உட்பட ஐந்து நாடுகள் விடுத்த எச்சரிக்கை News Lankasri