இலங்கை கடற்றொழிலாளர்கள் மீது பெற்றோல் குண்டுத்தாக்குதல்
இலங்கையின் தென்கடல் பிரதேசத்தில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்றொழிலாளர்களின் ஆழ்கடல் மீன்பிடிப் படகு ஒன்றின் மீது, இந்தோனேசிய ஆழ்கடல் மீன்பிடிப் படகு கடற்றொழிலாளர்கள் பெற்றோல் குண்டுத்தாக்குதல் நடத்தியுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
நீர்கொழும்பு துறைமுகத்தில் இருந்து தென்கடலில் கடற்றொழிலில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்றொழிலாளர்களின் ஆழ்கடல் மீன்பிடிப் படகு ஒன்றின் மீது இந்தோனேசிய ஆழ்கடல் மீன்பிடிப் படகில் இருந்த கடற்றொழிலாளர்கள் பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
சம்பவத்தில் தீக்காயமடைந்த திருகோணமலைப் பிரதேசத்தைச் சேர்ந்த 33 வயதான கடற்தொழிலாளர் நேற்று(11.07.2023) இரவு இலங்கை கடற்படையினரின் டோரா அதிவேகப்படகு மூலம் காலி துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்ட பின்னர், கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வைத்தியசாலையில் அனுமதி
சம்பவத்தில் காயமடைந்த மீனவர் உள்ளிட்ட குழுவினர், சசிந்தா புதா எனும் ஆழ்கடல் மீன்பிடிப் படகில் கடலுக்குச் சென்ற போது, தென் கடலில் கடல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இந்தோனேஷியாவின் ஆழ்கடல் மீன்பிடிப் படகு பெட்ரோல் குண்டுத் தாக்குதலை நடத்தியள்ளது.
இதனால் காயமடைந்த மீனவர், இலங்கை கடற்பரப்பில் பயணித்த கப்பலொன்றில் ஒப்படைக்கப்பட்டு, பின்னர் அந்தக் கப்பல் மூலம் தென் கடற்படை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டடுள்ளார்.
இந்நிலையில், கடற்படை அதிகாரிகள் காயமடைந்தவர்களை டோரா படகில் நேற்று இரவு காலி துறைமுகத்திற்கு கொண்டு வந்து கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |