மட்டக்களப்பில் வர்த்தக நிலையமொன்றின் மீது பெட்ரோல் குண்டுத் தாக்குதல்
மட்டக்களப்பு(Batticaloa) - இலுப்படிச்சேனை பிரதான வீதியில் உள்ள வர்த்தக நிலையமொன்றின் மீது பெட்ரோல் குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் நேற்றிரவு 8.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
தமிழரசுக் கட்சியின் மத்தியக் குழுக் கூட்டத்தில் குழப்பம்! மாவையை கடும் தொனியில் எச்சரித்த சாணக்கியன்
பெட்ரோல் குண்டு தாக்குதல்
குறித்த பகுதியில் அமைந்துள்ள தொலைபேசி விற்பனை நிலையமொன்றின் மீதே, அடையாளம் தெரியாத நபரொருவரினால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அருகில் இருந்த கடையின் சிசிரிவி கமராவில் இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பான காட்சிகள் பதிவாகியுள்ளன.
இந்த தாக்குதலின் போது வர்த்தக நிலையம் முற்றாக தீயில் எரிந்துள்ளதுடன், விற்பனை நிலையத்தில் இருந்த உபகரணங்களும் தீயில் கருகி உள்ளன.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கரடியனாறு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஹீரோவாக என்ட்ரி கொடுக்கும் இயக்குனர் ஷங்கர் மகன் அர்ஜித்... நாயகி, பட பெயருடன் வெளியான போட்டோ Cineulagam
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan