தேசபந்து தென்னகோனுக்கு எதிராக உயர் நீதிமன்றில் மனு தாக்கல்
தேசபந்து தென்னகோனை பொலிஸ் பதில் மா அதிபராக நியமித்த ஜனாதிபதியின் தீர்மானத்தை இரத்துச் செய்யுமாறு கோரி இரண்டு சட்டத்தரணிகள் உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளனர்.
அண்மையில் வழங்கப்பட்ட உயர்நீதிமன்றத் தீர்ப்பு மற்றும் அவருக்கு எதிராக நிலுவையில் உள்ள வழக்குகள் பலவற்றை முன்னிலைப்படுத்தி, சட்டத்தரணி அமில எகொடமஹவத்த மற்றும் மனோஜ் நாணயக்கார ஆகியோர் இந்த மனுவை தாக்கல் செய்தனர்.
மூவர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை
டிசெம்பர் 14 அன்று உயர்நீதிமன்றத்தின் மூன்று நீதியரசர்களைக்; கொண்ட அமர்வு, முன்னாள் இராணுவ சிப்பாய் ஒருவரின் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக தெரிவித்து, தேசபந்து தென்னகோன் உட்பட மூவர் மீது ஒழுக்காற்று நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு பொலிஸாரின் தேசிய ஆணைக்குழுவுக்கு உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில் தேசபந்து தென்னகோன், பதில் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்படுவதை ஏற்க முடியாது என மனுதாரர்கள் தெரிவித்தனர்.
இது ஏனைய குடிமக்களுக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை மீறுவதாகும் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

கழுத்தில் தாலி ஏறிவுடன் மொத்தமாக மாறிய சீதா.. வாழ்க்கை இழந்த மீனா- பரிதவிப்பில் குடும்பத்தினர் Manithan

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri
