இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தாக்கல் செய்துள்ள வழக்கு
தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை பறிக்கும் வகையில் ஐக்கிய மக்கள் சக்தி எடுத்த தீர்மானத்தை இரத்துச் செய்யும் உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தாக்கல் செய்த மனுவை விசாரிப்பதற்கான திகதியை உச்ச நீதிமன்றம் நிர்ணயித்துள்ளது.
பிரியந்த ஜயவர்தன, குமுதுனி விக்ரமசிங்க மற்றும் அச்சல வெங்கப்புலி ஆகிய மூவரடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு முன்னிலையில் இந்த மனு இன்று (02.05.2023) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இந்த மனு ஜூன் 8ஆம் திகதி விசாரணைக்கு வரும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
நியாயமான ஒழுக்காற்று விசாரணை
அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்திற்கு ஆதரவளிப்பதாக குற்றம் சுமத்தி பிரதிவாதிகள் தம்மை சபையில் இருந்து வெளியேற்ற முயற்சித்துள்ளதாக மனுதாரர் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்துள்ளார்.
அந்த தீர்மானத்தை எட்டுவதற்கு முன்னர் பிரதிவாதிகள் எந்தவொரு நியாயமான ஒழுக்காற்று விசாரணையையும் மேற்கொள்ளவில்லை என சுட்டிக்காட்டிய இராஜாங்க அமைச்சர் இயற்கை நீதியின் சட்டக் கோட்பாடு மீறப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன்படி, பிரதிவாதிகள் எம்.பி பதவியை பறிக்கும் வகையில் எடுத்த தீர்மானம் சட்டத்திற்கு முரணானது எனவும், அதனை இரத்துச் செய்து உத்தரவு பிறப்பிக்குமாறும் மனுவில் மேலும் கோரப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, நாடாளுமன்றத்தின் பொதுச் செயலாளர், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்கள் இந்த மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தான், சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல் - இந்தியா சொந்தமாக உருவாக்கும் பாதுகாப்பு அமைப்பு News Lankasri

ஆயுத ஏற்றுமதியில் சாதனை படைத்த நாடு - ஜேர்மனி, இந்தியா உட்பட பல நாடுகள் முக்கிய வாடிக்கையாளர்கள் News Lankasri
