டயானா கமகே தாக்கல் செய்த மனுவின் வாதம் ஒத்திவைப்பு
ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் உறுப்புரிமையை நீக்கியமைக்கு எதிராக நாடாளுமன்ற உறுப்பினர் டயானா கமகே தாக்கல் செய்திருந்த மனுவின் வாதத்திற்கான அனுமதியை உயர்நீதிமன்றம் இன்று ஒத்திவைத்துள்ளது.
இதன்படி மனுவை 2023 மார்ச் 2 ஆம் திகதி அன்று விசாரணைக்கு எடுப்பதாக உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.
மனு விசாரணை
அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களிக்க தீர்மானித்ததையடுத்து, கட்சி உறுப்புரிமையிலிருந்து தாம் நீக்கப்பட்டதாக டயானா கமகே தனது மனுவில் தெரிவித்துள்ளார்.
தாம் அரசாங்கத்தின் உறுப்பினர் அல்ல என்றும், சுதந்திரமாகவும், கோரிக்கையின்படி தனது மனசாட்சிக்கு இணங்கவும் செயற்படும் நாடாளுமன்ற உறுப்பினர் எனவும் மனுதாரர், தமது மனுவில் தெரிவித்துள்ளார்.
கட்சியிலிருந்து நீக்குதல்
கட்சியின் பொதுச் செயலாளர், அதன் தலைவர் சஜித் பிரேமதாச, நாடாளுமன்ற செயலாளர் நாயகம், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர், தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்கள் மற்றும் பலரை பிரதிவாதிகளாக டயானா கமகே குறிப்பிட்டுள்ளார்.
2021, ஒக்டோபர் 08 ஆம் திகதியன்று எழுதப்பட்ட கடிதத்தின் மூலம் கட்சியில்
இருந்து தன்னை வெளியேற்றுவதற்கான முடிவு, கட்சியின் யாப்பை மீறும் செயல்
என்றும் கமகே தெரிவித்துள்ளார்.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 23ம் நாள் - காலை திருவிழா





விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 7 மணி நேரம் முன்

உக்ரைனில் கால் பதிக்கும் ஐரோப்பிய நாடுகளின் படைகள்! ரஷ்யா தொடர்பில் டிரம்ப் வழங்கிய உறுதி News Lankasri
