மைத்திரிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு : நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு(Maithripala Sirisena) எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் அவருக்கு அழைப்பாணை அனுப்புமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீதிமன்றத்தை அவமதித்ததாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இடைக்கால தடையுத்தரவு
குறித்த மனு, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் சஷி மகேந்திரன் ஆகியோர் முன்னிலையில் இன்று(30.05.2024) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்குழு உறுப்பினர் மான்டேக் சரத் சந்திரவினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மனு தொடர்பான உண்மைகளை உறுதிப்படுத்தும் வகையில் பிரதிவாதியான மைத்திரிக்கு அழைப்பாணை அனுப்ப நடவடிக்கை எடுக்குமாறும் மனுதாரரின் சட்டத்தரணிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக செயற்படுவதற்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் அண்மையில் இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்திருந்தது.
அந்த இடைக்கால உத்தரவினை மீறும் வகையில் அவர் செயற்பட்டுள்ளதாக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிக்க வைத்த உக்ரைனியர்: ஜேர்மனி எடுத்துள்ள அதிரடி முடிவு News Lankasri
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan