புத்தர்சிலை விவகார வழக்கில் கஸ்ஸப தேரர் உள்ளிட்டோரின் கோரிக்கை.. நீதிமன்று விடுத்துள்ள உத்தரவு
விளக்கமறியல் உத்தரவை இரத்து செய்யக் கோரி கஸ்ஸப தேரர் மற்றும் இரண்டு பிக்குகளை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை எதிர்வரும் 22ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருகோணமலை புத்தர் சிலை சம்பவம் தொடர்பாக பலாங்கொட கஸ்ஸப தேரர் மற்றும் இரண்டு பிக்குகளை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதவான் உத்தரவு பிறப்பித்திருந்தார்.
இரத்து சேய்ய கோரிக்கை
இதனை இரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை எதிர்வரும் 22ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த மனுJM3BLவை பலாங்கொட கஸ்ஸப தேரர் உட்பட இரண்டு பிக்குகள் சமர்ப்பித்துள்ளனர்.
இந்நிலையில், இந்த மனு இன்று மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு முன் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
அதன் பின்னர் உண்மைகளை உறுதிப்படுத்துவதற்காக எதிர்வரும் 22 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உத்தரவிடப்பட்டது.