ரியாஜ் பதியுதீன் மீதான வழக்கு தொடர்பில் சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா மனு தாக்கல்
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் சகோதரரான ரியாஜ் பதியுதீன் சார்பாக சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா தானே மனுதாரராக அடிப்படை மனித உரிமை மனுதாக்கல் செய்து நஷ்ட ஈடாக 500 கோடி ரூபாயை கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பந்தமாக பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் ஏற்கனவே 2020ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14 ம் திகதி கைது செய்யப்பட்டு குற்றப் புலனாய்வுப் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு சாட்சியங்கள் இல்லையென்ற அடிப்படையில் 2020ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 29ம் திகதி விடுதலை செய்யப்பட்டார்.
இதே குற்றச்சாட்டின் அடிப்படையில் மீண்டும் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் 2021ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24ம் திகதி வெள்ளவத்தையில் வைத்து கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின், சகோதரரான ரியாஜ் பதியுதீன் மீதான கைதும், தடுத்து வைப்பும் சட்டரீதியற்றதெனவும் ,நஷ்ட ஈடாக 500 கோடி ரூபாய் கோரி சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா தானே மனுதாரராக அடிப்படை மனித உரிமை மனுவொன்றை இன்று தாக்கல் செய்துள்ளார்.