கிளிநொச்சியில் அறக்கொட்டியான் புழுத்தாக்கம்! மன உளைச்சலில் விவசாயிகள்
கிளிநொச்சி(Kilinochchi) மாவட்டத்தின் 2025ம் ஆண்டுக்கான சிறுபோக நெற் செய்கை மாவட்டத்தின் மிகப்பெரிய குளம் இரணைமடுக்குளம் உள்ளிட்ட அனைத்து குளங்களின் கீழ் சிறுபோக செய்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், தற்போது பயிர்கள் 15-25 நாட்கள் பயிர்களாக உள்ள நிலையில் அறக்கொட்டியான் புழுத்தாக்கம் பயிர்களை முற்றாக அழிப்பதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
கிளிநொச்சி மாவட்டத்தின் முரசுமோட்டை, ஊரியான், பன்னங்கண்டி பகுதிகளில் குறித்த புழுவின் தாக்கம் அதிகரித்துள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
கடந்த காலபோக நெற் செய்கையிலும் நோய்த்தாக்கம் காரணமாக தாம் பெரும் நட்டத்தை எதிர்நோக்கியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
இதனால் தாங்கள் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாகவும் விவசாயத்தை விட்டுவிட நினைத்துள்ளதாகவும் கவலை வெளியிட்டுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
100 ஆண்டுகளின் பின் அட்சய திருதியையில் உருவாகும் 5 ராஜ யோகங்கள்! முழு பலன் இந்த ராசிகளுக்கு தான் Manithan
ஈரான் மீது மீண்டும் குண்டு வீச்சு... அடுத்த வாரத்தில் முடிவெடுக்க இருப்பதாக ட்ரம்ப் பேச்சு News Lankasri
கோமதியிடம் அடுத்த குண்டை தூக்கிப்போட்ட மீனா, இனி நடக்கப்போவது என்ன... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam