மாற்றுத்திறனாளிகள் எதிர்கொள்ளும் சவால்கள்: கிளிநொச்சியில் விசேட கலந்துரையாடல்
மாற்றுத்திறனாளிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை உரிய முறையில் நிவர்த்தி செய்வதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் முன்மொழிவுகள் பற்றிய தகவல்கள் தொடர்பான விசேட செயலமர்வு கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது.
குறித்த கலந்துரையாடலானது, இன்று (13.05.2024) கிளிநொச்சி (Kilinochchi) மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.
இதன்போது, மாற்றுத்திறனாளிகள் பற்றிய நாடாளுமன்ற ஒன்றியத்தின் தலைவர் டலஸ் அழகப்பெரும (Dullas Alahapperuma) நிகழ்விற்கு தலைமை தாங்கியுள்ளார்.
புள்ளிவிபர தகவல்கள்
அதேவேளை, இந்த செயலமர்வில், நாடாளுமன்ற உறுப்பினர் மதுரவிதாரண, பதில் அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர்கள், மனித உரிமைகள் அமைப்பு சார்ந்தவர்கள் மறறும் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |