ஜனாதிபதி ரணிலுடன் தனிப்பட்ட சந்திப்புக்குத் தயாராகும் மொட்டு
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் தனிப்பட்ட சந்திப்பை நடத்துவதற்கான கோரிக்கையை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முன்வைத்துள்ளது.
ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (01.02.2024) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே, இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதியுடனான சந்திப்பு
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சாகர காரியவசம் உட்பட கட்சியின் உறுப்பினர்கள் பலரும் ஜனாதிபதியுடனான நேற்றைய சந்திப்பில் பங்கேற்றிருந்தனர்.
இதன்போது, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்களான மகிந்த அமரவீர, நிமல் சிறிபால டி சில்வா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திசாநாயக்க ஆகியோரும் கலந்துகொண்டனர்.
அத்துடன், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், ஐக்கிய தேசியக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன, பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோரும் கலந்துகொண்டனர்.
ஜனாதிபதித் தேர்தல்
சுமார் ஒன்றரை மணித்தியாலங்கள் இடம்பெற்ற இந்தக் கலந்துரையாடலில் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டது என்று தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் தமது கட்சி இதுவரையில் தீர்மானம் எடுக்காத நிலையில், ஜனாதிபதியுடன் தனிப்பட்ட கலந்துரையாடல் ஒன்றின் மூலம் இந்த விடயம் தொடர்பில் ஆழமாகக் கலந்துரையாட வேண்டும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ட்ரம்புக்கு பதிலடி... 8,000 அமெரிக்க தயாரிப்புகள் மீது வரி விதிக்க பிரித்தானியா முடிவு News Lankasri

விரைவில் ஒளிபரப்பாக போகும் நடிகை குஷ்பு நடிக்கும் புதிய சீரியல்... எந்த டிவி, நேரம் முழு விவரம் Cineulagam

சூப்பர் சிங்கரில் ஏ.ஆர்.ரகுமான் ஹிட்ஸ் ரவுண்டில் சில போட்டியாளர்களுக்கு சர்ப்ரைஸ்.. என்ன தெரியுமா? Cineulagam

மனைவியும் மாமியாரும் தினமும் துஷ்பிரயோகம் செய்வதாக அதிர்ச்சி புகார்! ரகசிய கமெரா மூலம் அம்பலமான கொடுமை News Lankasri

கொடூர வில்லனாக மாறிய குணசேகரன், தனது அம்மாவையே இப்படி செய்வாரா?... எதிர்நீச்சல் பரபரப்பு புரொமோ Cineulagam
