யாழில் கணவாய் பிடிக்க கடலுக்கு சென்றவர் பரிதாபமாக உயிரிழப்பு
யாழில் கணவாய் பிடிப்பதற்கு கடலுக்கு சென்ற குடும்பஸ்தர் திடீரென உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்றையதினம் (28.09.2024) இடம்பெற்றுள்ளது.
இதன்போது, ஆனைக்கோட்டை பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய 4 பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த நபர் உட்பட சக தொழிலாளர்கள் என 5 பேர் கணவாய் பிடிப்பதற்கு, கடலினுள் தடி நடுவதற்காக படகினில் சென்றுள்ளனர். இதன்போது குறித்த நபர் திடீரென மயக்கமடைந்துள்ளார்.
உடற்கூற்று பரிசோதனை
இந்நிலையில், அவரை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை, அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டுள்ளார்.
இதன்போது, மாரடைப்பினால் மரணம் சம்பவித்ததாக உடற்கூற்று பரிசோதனைகளில் தெரியவந்துள்ளதுடன் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பிரபல இயக்குனர் வேலு பிரபாகரன் கவலைக்கிடம்! இறந்துவிட்டதாக பரவிய செய்தி பற்றி குடும்பத்தினர் விளக்கம் Cineulagam

Jurassic World Rebirth 13 நாட்களில் இத்தனை ஆயிரம் கோடிகள் வசூலா, இதை அழிக்கவே முடியாது போல Cineulagam

படுக்கையில் நெப்போலியன் மகன்... எலும்பும் தோலுமாக மாறியதற்கு என்ன காரணம்? நேரில் சந்தித்த பிரபலம் Manithan
