பொலிஸ் காவலில் இருந்த நபர் தப்பியோட்டம்: தேடுதல் வேட்டை ஆரம்பம்
பொலிஸ் காவலில் இருந்த நபர் ஒருவர் தப்பியோடியுள்ள நிலையில், அவரை தேடி விசேட தேடுதல் வேட்டை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் வவுனியா - சிவலாக்குளம் பொலிஸ் நிலையத்தில் நேற்று (14.07.2023) இடம்பெற்றுள்ளது.
நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நபர் ஒருவரைக் கைது செய்திருந்த பொலிஸார், நீதிமன்றத்தில் ஒப்படைக்கும் வரை சந்தேக நபரை பொலிஸ் நிலையத்தில் உள்ள தடுப்புக் கூண்டில் அடைத்து வைத்துள்ளனர்.
மேலதிக விசாரணை
இந்நிலையில், மலசலகூடத்திற்கு செல்ல வேண்டும் என கூறிய சந்தேக நபர், மலசலகூடத்திற்குச் செல்லும் வழியில் பொலிஸாமிருந்து தப்பி ஓடியுள்ளதாக மேலதிக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
தப்பியோடிய சந்தேக நபரைக் கைது செய்வதற்கான விசேட தேடுதல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |