புகையிரத தண்டவாளத்திற்குள் தவறி விழுந்த நபர்!
மாத்தறை புகையிரத நிலையத்தில் தண்டவாளத்திற்குள் தவறி விழுந்த நபரொருவரின் கால் ரயிலுக்குள் சிக்குண்ட நிலையில் மீட்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் இருந்து பெலியத்தை வரையான சாகரிகா ரயில் மாத்தறை ரயில் நிலையத்தை இன்று மாலை வந்தடைந்த போது ரயிலில் ஏராளம் பயணிகள் நிரம்பியிருந்தனர்.
அத்துடன் ரயில் நிலையத்திலும் பயணிகள் பெருமளவில் நிரம்பியிருந்தனர். இந்நிலையில் ரயிலில் இடம்பிடித்துக்கொள்ள முடியாமல் போன பயணியொருவர் ரயில் புறப்படுவதற்காக முன்னால் நகரத் தொடங்கியபோது மிதிபலகையில் தொங்கிய நிலையிலேனும் பயணிப்பதற்காக ரயிலில் தொற்றிக் கொள்ள முயற்சித்துள்ளார்.

ரயில்வே மீட்பு பிரிவின் அதிகாரிகள் மற்றும் தீயணைப்புத் துறையினர் அழைப்பு
இதன்போது அவர் தவறி ரயிலுக்கு அடியில் தண்டவாளத்தில் வீழ்ந்துள்ளார். அவரது கால் ஒன்றும் ரயிலுக்கு அடியில் சிக்குண்டுள்ளது. கடுமையான காயங்களுடன் போராடிக் கொண்டிருக்கும் குறித்த பயணியை மீட்பதற்கு ஏனைய பயணிகள் ஒன்று சேர்ந்து பெரும் பிரயத்தனமொன்றை மேற்கொண்டுள்ளனர்.
எனினும் அவர்களால் முடியாத நிலையில் ரயில்வே மீட்பு பிரிவின் அதிகாரிகள் மற்றும் தீயணைப்புத் துறையினர் தற்போது சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர்.
2007ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த அழகிய தமிழ் மகன், வேல், பொல்லாதவன் படங்கள்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam
சக்தியை முடித்த சந்தோஷத்தில் குணசேகரன், என்ன செய்வது என்ற பதற்றத்தில் ஜனனி...எதிர்நீச்சல் தொடர்கிறது ஸ்பெஷல் புரொமோ Cineulagam