காரில் அநுரவின் புகைப்படத்தை ஒட்டிய நபர் செய்த மோசமான செயல்!
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் புகைப்படம் மற்றும் தேசிய மக்கள் இராணுவத்தின் சின்னம் பொறிக்கப்பட்ட காரில் இறைச்சிக்காக ஆடுகளை கொண்டு சென்ற இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் வெலிபன்ன மற்றும் பதுரலிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த கார், சந்தேகத்துக்கு இடமான நிலையில் பயணித்துக்கொண்டிருப்பதால், பொலிஸாரால் சோதனை செய்யப்பட்டது.
சட்டவிரோத செயற்பாடு
இதன்போது, கால்கள் பின்புறம் கட்டப்பட்ட நிலையில் இறைச்சிக்காக கொண்டு செல்லப்பட்ட ஒரு ஆடு காரின் பின்புறத்தில் இருந்துள்ளது.
அத்துடன், கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்களும் நீண்ட காலமாக இந்த காரைப் பயன்படுத்தி பதுரலிய மற்றும் அருகிலுள்ள பகுதிகளிலிருந்து இறைச்சிக்காக மாடுகள் மற்றும் ஆடுகளை சட்டவிரோதமாக கொண்டு சென்று வருவதாக தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மத்துகம நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தபட உள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





வடிவேலு, பகத் பாசில் நடித்துள்ள மாரீசன் 2 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ Cineulagam
