யாழில் கிணற்றடியில் திடீரென மயங்கி விழுந்த குடும்பஸ்தர் உயிரிழப்பு
யாழில் கிணற்றடியில் ஆடைகளை கழுவிக்கொண்டிருந்த குடும்பஸ்தர் ஒருவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.
சுன்னாகம் - சுப்பிரமணியம் வீதியைச் சேர்ந்த 58 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நபர் இன்று(26) கிணற்றடியில் ஆடைகளை கழுவிக்கொண்டிருந்தார். இதன்போது திடீரென மயங்கி நிலத்தில் சரிந்துள்ளார்.
மரண விசாரணை
இதனை அவதானித்த அவரது மகன் அவரை தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்றார். இருப்பினும் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
இதன் பின்னர் உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





வடிவேலு, பகத் பாசில் நடித்துள்ள மாரீசன் 2 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ Cineulagam

நேருக்கு நேர் மோதவிருந்த விமானங்கள்: 300 அடி கீழ் நோக்கி பாய்ந்த விமானம்! திக் திக் நொடிகள்! News Lankasri
