வெள்ளை நிற மண்ணெண்ணையுடன் ஒருவர் கைது
கிளிநொச்சி முழங்காவில் நாச்சிக்குடா பகுதியில் மண்ணெண்ணையுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் நேற்று(06) மாலை இடம்பெற்றுள்ளது.
முழங்காவில் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலிற்கு அமைவாகவே இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சம்பவம்
இதன்போது கொள்கலன்களில் நிறைத்து வைக்கப்பட்டிருந்த 3600 லீட்டர் மண்ணெண்ணெய் மீட்கப்பட்டுள்ளது. இதேவேளை சம்பவத்துடன் தொடர்புடைய 55 வயதான ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த மண்ணெண்ணை வெள்ளை நிறமானது எனவும், இலங்கையில் பயன்படுத்தப்படும் மண்ணெண்ணையிலிருந்து வேறுபட்டு காணப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விசாரணை
மீட்கப்பட்ட மண்ணெண்ணெய் இந்தியாவிலிருந்து கடத்தப்பட்டிருக்கலாம் எனவும் நம்பப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்டு வரும் முழங்காவில்
பொலிஸார் விசாரணைகளின் பின்னர் நீதிமன்ற
நடவடிக்கைக்குட்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

வீட்டைவிட்டு வெளியே போன மீனா, விஜயாவிற்கு ஷாக் கொடுத்த முத்து.. சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam

ரஷ்யா, சீனாவுடன் ஆயுதப்போட்டி ஏற்படும் அச்சம்: அதிர்ச்சியூட்டும் உத்தரவை பிறப்பித்த செயலாளர் News Lankasri
