முல்லைத்தீவில் தேர்தல் விதிமுறையினை மீறிய நபர் கைது!
முல்லைத்தீவு (Mullaitiivu) ஒட்டுசுட்டான் பிரதேசத்திற்கு உட்பட்ட கூழாமுறிப்பு பகுதியில் தேர்தல் விதிமுறையினை மீறி செயற்பட்ட நபர் ஒருவரை ஒட்டுசுட்டான் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
நேற்று (13.11.2024 ) மாலை ஒட்டுசுட்டான் கூழாமுறிப்பு பகுதியில் தேர்தல் விதிமுறையினை மீறும் வகையில் செயற்பட்ட நபர் தொடர்பில் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய கட்சியின் சின்னம் பதிக்கப்பட்ட வர்ண பொருட்கள், கொடிகள், பெல்ட், தொப்பிகள் என்பன இதன்போது மீட்கப்பட்டுள்ளன.
வழக்குப் பதிவு
11 ஆம் திகதி நள்ளிரவுடன் தேர்தல் பரப்புரைகள் நிறைவிற்கு கொண்டு வரப்பட்டுள்ள நிலையில் தேர்தல் வீதிமுறைகளை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில் குறித்த நபரை பொலிஸார் கைது செய்து வழக்கு பதிவு செய்துள்ளார்கள்.

ஒட்டுசுட்டான் பொலிஸார் மேற்கொண்ட சட்ட நடவடிக்கையின் போது குறித்த நபர் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் எதிர்வரும் 19ஆம் திகதி அன்று நீதிமன்றில் முன்னிலையாகுமாறு பொலிஸாரால் அறிவிக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
84 நாட்கள் பிக்பாஸ் 9 வீட்டில் விளையாடியதற்காக கனி வாங்கிய சம்பளம்... எத்தனை லட்சம் தெரியுமா? Cineulagam
கெய்ர் ஸ்டார்மர் பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்படுவது உறுதி: கடுமையாகத் தாக்கிய பிரபலம் News Lankasri