யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நபர் உயிரிழப்பு
விபத்தில் சிக்கிய நபர் ஒருவர் சிகிச்சை பலனின்றி நேற்றையதினம்(29.04.2026) யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.
பனிச்சங்குளம் - மாங்குளம் பகுதியை சேர்ந்த விஸ்வலிங்கம் கண்ணன் (வயது 46) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
வைத்தியசாலையில் சிகிச்சை
இது குறித்து மேலும் தெரியவருகையில், இவர் கடந்த 04ஆம் திகதி மல்லாவியில் இருந்து மாங்குளம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார்.
அவருக்கு முன்னால் ஒரு லொறி பயணித்துக்கொண்டிருந்தது. அந்த லொறியானது வேகத்தை குறைத்ததும் அவர் அந்த லொறியுடன் மோதுண்டு விபத்துக்குள்ளானார்.

பின்னர் மாங்குளம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து 06ஆம் திகதி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றையதினம் உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.