விஜய்க்கு 120 ஆசனங்கள்.. எதிர்பார்ப்பை அதிகரிக்கும் தமிழ்நாட்டு தேர்தல் மதிப்பீடுகள்
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம், தனது முதல் களத்திலேயே 98 முதல் 120 ஆசனங்களைக் கைப்பற்றும் என்று ஏக்ஸிஸ் மை இந்தியா வாக்குக்கணிப்பு முடிவுகள் தெரிவித்துள்ளன.
(ஆக்சிஸ் மை இந்தியா என்பது மும்பையைத் தலைமையிடமாகக் கொண்ட ஒரு இந்தியக் கருத்துக் கணிப்பு நிறுவனம் ஆகும். 2019 இந்தியப் பொதுத் தேர்தலில், ஆக்சிஸ் மை இந்தியா வெற்றி பெறும் கட்சி, அவர்களின் மக்கள் ஆணையின் வீச்சையும் வெற்றிகரமாகக் கணித்துள்ளது.)
இந்த கணிப்புகள் உண்மையானால், தற்போதைய ஆளுங்கட்சியான திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு பெரும் சவாலாக அமைந்து, தமிழக அரசியலில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை இது ஏற்படுத்தும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
அசாதாரண சாதனை
இந்நிலையில், குறைந்தபட்சமாக 98 ஆசனங்களைக் தவெக வென்றாலே, அது ஒரு அசாதாரண சாதனையாகக் கருதப்படுவதோடு, மாநில அரசியலை ஒரு புதிய சகாப்தத்திற்கு இட்டுச் செல்லும்.

இந்தத் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கும், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.
ஏப்ரல் 23 அன்று நடைபெற்ற வாக்குப்பதிவில் தமிழகம் முழுவதும் 85 சதவீத வாக்குகள் பதிவாகின. தமிழகத்தின் அனைத்து 234 தொகுதிகளுக்கான தேர்தல் முடிவுகள் எதிர்வரும் திங்களன்று அறிவிக்கப்பட உள்ளன.
இந்நிலையில், அதுவரை தமிழக அரசியலில் நிலவும் இந்த எதிர்பார்ப்பு தொடர்ந்து நீடிக்கும் என்பதில் ஐயமில்லை.